என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருப்பதி திருக்குடை"
இதில் விசுவ இந்து வித்யா கேந்திரா அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.கிரிஜா சேஷாத்ரி வரவேற்றார். இந்து தர்மார்த்த சமிதி நிர்வாக அறங்காவலர் வேதாந்தம்ஜி முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி வெள்ளிமலை ஸ்ரீவிவேகானந்தா ஆசிரமம் ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தா மகாராஜ் அருளாசி வழங்கினார்.
திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி தொடங்கிவைத்து பேசியதாவது:-
இறைவனின் கருணையால் திருப்பதி திருக்குடை விழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானது எப்போதும் துறவியர்களின் ஆசீர்வாதத்துடன் நடத்தப்படுகிறது. விழாவில் பங்கேற்பதற்கு கூட கடவுளின் கருணை நமக்கு தேவை. கடவுளின் பார்வையின்றி நம்மால் எதையும் செய்ய முடியாது. தென்னிந்தியாவில் மிகப்பெரிய நிகழ்ச்சி திருப்பதி திருக்குடை விழா தான். இந்த விழாவில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்கின்றனர்.
பாரதமானது புண்ணிய பூமி, ஞான பூமியாகும். எல்லா சமய, மதங்களுக்கும் இந்து மதம் தாய் போன்றது. தேவர்கள் காலத்தில் அசுரர்கள் இருந்தனர். தேவர்களாக இப்போது இந்துக்கள் உள்ளனர். அதை தாக்கக்கூடிய அசுரர்களாக பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்களை கடவுள் பார்த்து கொள்வார். இந்த திருக்குடைகளுடன் 20 லட்சம் பக்தர்களின் பிரார்த்தனைகளையும் சேர்த்து தான் சமர்ப்பிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தா மகாராஜ் பேசுகையில், “எல்லா மதத்துக்கும் அடிப்படை இந்து மதம் தான். ஏனெனில் இந்து மதம் என்பது சனாதன தர்மம். இந்த சனாதன தர்மத்தை சிலர் இல்லாமல் செய்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களது நம்பிக்கை பலிக்காது. இந்துக்கள் ஒன்று சேர ஆரம்பித்துவிட்டார்கள். உலகம் வாழ வேண்டும் என்றால் பாரதம் வாழ வேண்டும்.
பாரதம் வாழ வேண்டும் என்றால் அதற்கு உயிர் நாடியான ஆன்மிகம் வாழ வேண்டும், இந்து சமயம் வாழ வேண்டும். தியாகத்துடன் நாம் தொண்டாற்ற வேண்டும். இந்த திருக்குடை நிகழ்ச்சியில் பெருமாள் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்”, என்று குறிப்பிட்டார்.
முன்னதாக திருப்பதி திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச்சென்றபோது பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா...’ என உற்சாக முழக்கமிட்டு வரவேற்றனர். ஆங்காங்கே பக்தர்களுக்கு குளிர்பானங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக இருந்தனர்.
சென்ன கேசவபெருமாள் கோவிலில் தொடங்கிய திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி. போஸ் ரோடு, கோவிந்தப்ப நாயக்கன் தெரு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து மாலை 6 மணிக்கு கவுனியை தாண்டியது. வழி நெடுகிலும் ஏராளமான மக்கள் திரண்டு நின்று பூக்களை தூவி திருக்குடைகளை வரவேற்றனர். வருகிற 16-ந் தேதி திருமலையில் அதிகாரிகளிடம் திருக்குடைகளை வழங்குகின்றனர்.
திருப்பதி திருக்குடை ஊர்வலத்தையொட்டி, தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் சென்னை சென்டிரல் அருகே அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் துறைமுகம் தொகுதி செயலாளர் மற்றும் விழாக்குழு தலைவரான எம்.பிரகாஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
சென்னை:
சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று மதியம் தொடங்கியது.
ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருப்பதி திருக்குடை ஊர்வலம் பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்னை கேசவ பெருமாள் கோவிலில் இருந்து இன்று மதியம் பூஜைகளுடன் புறப்பட்டது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷங்களுடன் 11 திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி தொடங்கி வைத்தார். நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம்ஜி, சுவாமி சைதன்யானந்தா மகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக மாலை 4 மணிக்கு யானைக்கவுனி தாண்டுகிறது. அதன் பின்னர் சால்ட் குவாட்டர்ஸ், செயின்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, அயனாவரம் காசி விசுவநாதர் கோவில் சென்றடைகிறது.
நாலை (12-ந்தேதி) ஐ.சி.எப்.. ஜி.கே.எம்.காலனி, திரு.வி.க.நகர், பெரம்பூர் வில்லிவாக்கம், சென்றடைகிறது. 13-ந்தேதி பாடி, அம்பத்தூர், திருமுல்லைவாயில் செல்கிறது. 14-ந்தேதி ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் சென்றடைகிறது. 15-ந்தேதி மணவாளநகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்று 16-ந்தேதி திருமலை செல்கிறது. அங்கு மாடவீதி வலம் வந்து வஸ்திரம் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜியர்கள் முன்னிலையில் திருப்பதி திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் திருக்குடைகள் ஒப்படைக்கப்படுகிறது.
இதுகுறித்து ஹிந்து தர்மர்த்த சமிதி அறக்கட்டளை அமைப்பு செயலாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி கூறியதாவது:-
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலையும், 200 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் இருந்து ஊர்வலமாக திருமலையில் திருக்குடைகளும் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வெகு விமரிசையாக திருக்குடை ஊர்வலம் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. 16-ந்தேதி திருக்குடைகள் திருமலையில் சமர்பணம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #Tirupati #TirupatiKudai
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்